அரியலூரில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் நீதிபதி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் அருள்ஜோதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ஆ சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார்
வட்டாரக் கூட்டணி செயலாளர் சிவராமன் விளக்க உரையாற்றினார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாக்கியம் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் பூங்கொடி தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தணிக்கை குழு ஜெயராஜ் தொடக்கப்பள்ளி வட்டார துணைத் தலைவர் வே முருகன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் எழில் டிக்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்
தமிழக ஆசிரியர் கூட்டணி வெ ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது