தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆர் ஆர் சி சார்பில் இரத்ததான முகாம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் ஆகியோர் தலைமையில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை இரத்த மைய மருத்துவர் டாக்டர் டி பாரதி குழுவினரின் மேற்பார்வையில் கீழ் இரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது. கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த மாணவிகளும் இரத்த அளவு மற்றும் எடை பற்றிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இரத்த தானம் வழங்கினார்கள். மொத்தமாக கல்லூரியின் சார்பில் 41 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.

இரத்ததானம் வழங்கிய மாணவிகளுக்கு பெரிய குளம் அரசு தலைமை குடியிருப்பு மருத்துவமனயினரால் நற் சான்றிதழ் வழங்கப்பட்டது இரத்ததானம் வழங்கிய கல்லூரி மாணவிகள் கூறும் போது தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவிகள் அனைவரும் இரத்ததானம் செய்தோம் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்திற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் கல்லூரி என். எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர் தமிழ்ச்செல்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *