ஜெயங்கொண்டம் நகரில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் சிஐடியு கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடந்தது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு நடந்த விழாவிற்கு ஸ்டாண்ட் பொருளாளர் விவேக் தலைமை தாங்கினார் சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி சிஐடியு கொடியேற்றி வைத்தார்
ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் ஏ சத்தியமூர்த்தி சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார் மார்க்கெட் அருகே நடந்த விழாவிற்கு சங்க தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார் சிஐடியு மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் கொடியேற்றினார் சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார் விழாவில் ஏராளமான தொழிலர்கள் கலந்து கொண்டனர்