கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வரலட்சுமி பூஜை தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் திருக்கோயிலில் வரலட்சுமி பூஜை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த பூஜையில் வரலட்சுமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன இந்த நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்களும் மற்றும் கல்லூரி அலுவலர்களும் பங்கேற்று மனம் உருகி வரலட்சுமி வேண்டி அம்மன் அருள் பெற்றனர்
இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைவரும் மங்களகரமாக வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சள் கயிறு வளையல் பூ மஞ்சள் குங்குமம் வழங்கப்பட்டன மேலும் பிரசாதமாக புளியோதரை கூழ் வடை கேசரி போன்றவை வழங்கப்பட்டன. கல்லூரி பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.