தருமபுரி -ஆகஸ்ட்

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் பாலமுருகன், ஸ்ரீ நாவகிரஹங்கள், ஸ்ரீ நாகர்கள், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 21/8/26 (வெள்ளி) ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ செந்தில் பாலமுருகன், ஸ்ரீ நாகர்கள், ஸ்ரீ மகா மாரியம்மன் சுவாமிகள் மற்றும் தீர்த்த குடம், முளைப்பாரி ஆகியவைகளை ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இருந்து எடுத்துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயிலை வந்து அடைந்தனர்.

மேலும் மேலும் 22/8/26 (சனி) காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், குபேர லட்சுமி பூஜைகள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 23/8/26 (ஞாயிறு) இரண்டாம் காலை யாக பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ செந்தில் பாலமுருகன், ஸ்ரீ பரிவார மூர்த்திகளுக்கும், ஸ்ரீ மஹா மாரியம்மன் மற்றும் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனைகளை தொடர்ந்து இரவு மண்ணேசுவரருக்கும், உலகநாயகி மஹா மாரியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.

இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு திருக்கோவில் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கௌரவ தலைவர் குப்புசாமி, தலைவர் செந்தில்குமரன், செயலாளர் பூபதி, பொருளாளர் சித்தேசன், துணைத் தலைவர்கள் கந்தசாமி, ராஜி, துணைச் செயலாளர்கள் கண்ணபிரான், இளங்கோவன், தணிகை குழு அப்பாவு, வடிவேலன் மற்றும் கோவில் நிர்வாக குழு, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *