கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் தெற்கு மாவட்டம், தென்னிலை ஊராட்சி மஞ்சபுலிப்பட்டியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிதாக அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.கரூர் தெற்கு மாவட்டச் செயலாளர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ எம்.சத்யா புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைத்தார்.
இப்புதிய பேருந்து சேவை மூலம் தென்னிலை ஊராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்,மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் போக்குவரத்து தேவைகள் மேலும் எளிதாகும்.பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இச்சேவை,மக்களின் நலனுக்கான மேலும் ஒரு சிறப்பான முன்னெடுப்பாக அமைந்தது என எம் எல் ஏ தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய,சார்பு அணி மற்றும் கிளை நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.