காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டின் CMA படிப்பிற்கான பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் வகுப்புகளின் துவக்க விழா வணிகவியல் துறையின் சார்பாக நடைபெற்றது.
துவக்க விழாவில் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர். கலை. இராம. வெங்கடேசன் அவர்கள் தலைமை வகித்து CMA படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து
மாணவர்கள் தங்களின் மூன்று ஆண்டு கல்லூரி படிப்புடன் CMA கல்வியையும் முடித்தால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் நிதியியல் ஆலோசகர் Financial Advisor மற்றும் நிதி ஆய்வாளர் Financial Analyst பணிக்கான வேலை வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார்.
மேலும் சென்ற கல்வி ஆண்டில் ( 2025- 2026) CMA பவுண்டேஷன் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசை கல்லூரி முதல்வர் வழங்கினார்
மேலும் இந்த ஆண்டு CMA பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை வணிகவியல் துறையின் உதவி பேராசிரியர்கள் Dr. A. தட்சிணாமூர்த்தி மற்றும் Dr. V. சம்பத் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக வணிகவியல் துறை தலைவர் திரு . M. வெங்கடேசன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.