மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பம் எம்எல்ஏவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கம்பம் நகரில் உள்ள முகாம் இல்லத்தில் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்

கம்பம் நகரில் செயல்பட்டு வரும் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினர் சுமார் 60 ஆண்டுக்கு மேல் உள்ள கோரிக்கையும் தமிழக மக்களின் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு உரிமை சார்ந்த மங்களதேவி கண்ணகி கோவிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக தமிழக அரசு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் மேலும் வருடத்திற்கு ஒரு முறை சித்ரா பௌர்ணமி அன்று மற்றும் திருவிழா கொண்டாடுவதை மாதம் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று கண்ணகி கோவில் திறக்கப்பட்டு திருவிழாவாக கொண்டாடடப்பட்டு பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் சிதலமடை ந்துள்ள கண்ணகி கோயிலை புனரமைப்பு செய்து புதுப்பித்து தமிழ் கடவுளான கண்ணகி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேரில் சந்தித்த கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில் மங்களாதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *