அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தமிழக அரசு தலைமை செயலாளரை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இடது சாரி இயக்கங்கள் இளைஞர் மற்றும் மாணவர் இயக்கங்களை ஒடுக்க நினைக்கும் தலைமைச் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் அருன்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் கந்தசாமி மூத்த உறுப்பினர் சிற்றம்பலம் மாவட்ட குழு பத்மாவதி திருமானூர் ஏசுதாஸ் மாவட்ட குழு சரோஜினி சாமிதுரை ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள் மாவட்ட குழு உறுப்பினர் ரவீந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *