நவரத்தின செங்கோல் வழங்கி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
வளையல் விற்ற திருவிளையாடல் கோலத்திலும் காட்சி தந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில், ஆவணி மூலத்திருவிழாவில், சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல் களை பக்தர் களுக்கு உணர்த்தும் வகை யிலான சிறப்பு அலங்காரங்களில் நாள்தோறும் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் கோலாகலமாக நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளினார். அப்போது சுந்தரேஸ்வரருக்கு கிரீடம் சூட்டி, நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், இந்த திருக்கோலத்தை பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.

சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம், ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்து, 8 மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறு வதாக நம்பப்படு கிறது. அந்த வகையில் நேற்று முதல் இறைவனின் ஆட்சி மதுரையில் தொடங்கி உள்ளது.


விழாவின்போது சுவாமியிடம் இருந்து பெற்ற செங்கோலை அவரது பிரதிநிதியாக கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் இணை ஆணையர் செல்லத்துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *