தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஆக- 25.
தஞ்சை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் பொன்விழா கணேசனார் கலை அரங்கில் நடைபெற்றது. அதில் சிலம்பம் மற்றும் குத்துவரிசை பொன்விழா போட்டிகள் நடந்தது.
இதில் ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும வீராங்கனைகள் கலந்து கெண்டனர். இதில் இரட்டை கட்டைக்கம்பு போட்டி, இந்தியன் நுன்சாக், குத்துவரிசை குழுப் போட்டிகளை ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிமுகம் செய்து வைத்தார்.
போட்டிகளை காலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
மாலை போட்டிகளில் வெற்றிபெற்றவர்
களுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பரிசு மற்றும் தொடர்நாயகன் விருதுகளை ராஜராஜன், சுந்தரசோழன் உள்பட 7 வீரர்களுக்கு சைலேந்திர பாபு வழங்கினார். விழாவிற்கு அகில உலக எம்.ஜி.ஆர்.சிலம்பாட்டம் கழக தலைவர் எஸ்.எம்.பிள்ளை தலைமை தாங்கினார். கழுகுமனையார் சோழா மார்ஷியால் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் பொதுச்செயலாளர் சுதிர்சந்திரகுமார் வரவேற்றார். விழாவில் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சிலம்பாட்டக கழகத் தலைவர் புனிதா கணேசன், இண்டியன் சிலம்பம் பெடரேஷன் முன்னாள் பொருளாளர் அன்புமதன்குமார், தமிழ்நாடு குத்துவரிசை விளையாட்டுக் கழகத் தலைவர் டாக்டர் சரவணவேல், பொதுச்செயலாளர் கலைச்செழியன், இங்கிலாந்து கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் காப்பாளர் லண்டன் ராமசாமி, போட்டிகள் இயக்குனர் மணவாளன், தொழில்நுட்ப பயிற்சியாளர் ஜோசப் பிலிப்போஸ், மகளிர் அணி காமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உலக சிலம்ப ராஜகுரு சந்திரசேகரன், தமிழ்நாடு காங்கிரஸ விளையாட்டு மேம்பாட்டு பிரிவு முன்னாள் மாநில தலைவர் கழுகுமனை ராஜராஜன் கழுகுமனையார், சோழா ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் தலைவர் ரவிக்குமார் லண்டன் நிர்வாக இயக்குனர் கழுகுமனை சுந்தரசோழன், தஞ்சை மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன், செயலாளர் அய்யப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.