மன்னார்குடி., ஆக.24

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தொடர்ந்து அந்தப் பகுதி மேகநாதபுரம் விவசாயிகளும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தோம் .

நான் மூன்று முறை அந்த போராட்ட களத்திற்கு சென்று காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு மூன்று நாட்கள் சிறையில் வைக்கப்பட்டேன். இந்த கடுமையான நெருக்கடிக்கு இடையே அங்கே இருக்கிற ஏரி , குளம் , குட்டைகள் விலை நிலங்களை விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தி சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிற இந்த மாபெரும் சதி திட்டத்தோடு பரந்தூர் விமான நிலையம் அமைக்க எடுத்த முடிவை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்னைக்கு கைவிட்டு உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவித்து இருப்பது இதை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம்.

குறிப்பாக ஆந்திராவை நோக்கி இந்த பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டால் தொழில் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்லும் என திராவிட முன்னேற்ற கழகம் கூறுவது உண்மைக்கு புறம்பானது சென்னைக்கு வடக்கே விமான நிலையம் அமைத்ததால் தான் தொழில் முதலீடுகள் அனைத்தும் ஆந்திராவை நோக்கி சென்றது.

சென்னைக்கு தெற்கே கன்னியாகுமரி வரையிலும் தமிழக எல்லை இருக்கிற பொழுது சென்னைக்கு தெற்கு பகுதியில் விமான நிலையம் அமைத்தால் தான் தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வர முடியும் என்பதை திராவிட முன்னேற்ற கழகம் உணர வேண்டும்.

எனவே முதலமைச்சர் அதில் எந்த சமரசமும் இல்லாமல் சென்னைக்கு தெற்கே விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை அவசரகால நடவடிக்கையாக துவங்குவதற்கு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் கோதாவரி காவிரி இணைப்பு என்பது பொருத்தமற்றது.

காவிரியில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்கின்ற பொழுது தான் கர்நாடக கேரள மாநிலங்களில் மழை நீர் காவிரி வழியாக கொள்ளிடம் வழியாக கடலில் சென்று கலக்கிறது அதே தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் கோதாவரியிலும் அபரிவிதமான தண்ணீர் வருகிறது .

எனவே காவிரியும் கோதாவரியும் இணைப்பதால் தண்ணீரை சேமித்து பயன்படுத்துவதற்கு தமிழ்நாட்டில் துளியும் வாய்ப்பு கிடையாத நிலையில் மேகதாட்டு அணைக்கட்ட கர்நாடக அரசு எடுக்கிற நடவடிக்கைக்கு மத்திய அரசு காவிரி கோதாவரி இணைப்பு என்கிற பெயரில் கர்நாடகத்திற்கு துணை போகிறதோ என்று விவசாயிகள் அச்சம் கொள்கிறோம்.

எனவே காவிரி கோதாவரி இணைப்பால் பேரழிவை சந்திக்கும் தமிழ்நாடு எனவே மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிட்டு அந்த மாநில முதலமைச்சர் காவிரியில் உபரி நீரை கடலில் கலக்கச் செய்கிறார்கள் என்று கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் சொல்வது உண்மைக்கு புறம்பானது.

தமிழக எல்லையான ராசி மணலில் பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய அந்த ராசி மணலில் தமிழ்நாடு அரசு புதிய அணையை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் தமிழ்நாடு அரசு அவசர கால நடவடிக்கையாக வரைவு திட்ட அறிக்கையை ராசி மணலுக்கு தயாரிக்க முன்வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *