தஞ்சாவூர், ஆக- 25.
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சக்திவேல் தலைமையில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் செபாஸ்டின், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் குமாரவேலு மற்றும் பலர் பேசினர்.

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவரும் பகுதிநேர பணியாளர்கள் என்பதால் தினசரி 4 மணி நேரம் பணி செய்திட வேண்டும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும். மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *