கல்பாக்கம் ஆக 25 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணபட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை கந்தசாமி ஆலயத்தின் 4 ஆவது ஆண்டு கும்பாபிசேகம் திருநட்சத்திர நாளையொட்டி காவடி மற்றும் சிறப்பு பால்குட அபிசேக விழா 25 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது

கிராம பொதுமக்கள் மற்றும் ஆறு படை வீடு யாத்திரைக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காலை 8 மணிக்கு கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர்

இதில் மூலவருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது நெற் குணபட்டு கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராம பெண்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *