தர்மபுரி

காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல்(BCA),கணினி அறிவியல்(CS),செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்(AI & DS) துறையின் சார்பில் 25/08/2026 செவ்வாய் அன்று “செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை ஆராய்வோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் பிரபாதேவி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் செல்வக்குமார் அவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் பற்றியும் தலைமையுரையாற்றினார். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் ரிகானா அவர்கள் சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையை வழங்கினார் .


சிறப்பு விருந்தினராகக் திருமதி A. மஞ்சுரேகா, M.Sc., M.Phil., Ph.D., உதவி பேராசிரியர், செயற்கை நுண்ணறிவு & இயந்திர கற்றல் துறை, ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், அவர்கள் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, அதன் பயன்பாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார் மேலும் மாணவர்களின் பங்கேற்பையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும் வகையில் சிறப்பு ஊடாடும் விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

இந்த விளையாட்டுகள் மாணவர்களின் சிந்தனைத் திறன், குழு ஒத்துழைப்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்தன..


இந்நிகழ்வில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தாளாளர் இராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், இணைச்செயலாளர் ஹரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார்,அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *