கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் , 75 ஆண்டுகால பயணத்தின் கல்விச் சிறப்பைக் குறிக்கும் வகையில், பவள விழா நிகழ்ச்சி,பி.எஸ்.ஜி.நூற்றாண்டு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது..

பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலரும் தலைவருமான ஜி. ஆர். கார்த்திகேயன் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன்,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,இன்ஃபோசிஸ் இணை நிறுவனர், ஆக்ஸிலர் வென்ச்சர்ஸ் தலைவர் மற்றும் பிரதீக்ஷா டிரஸ்ட் & பிரதிதி இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்-இன் அறங்காவலரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் திலகவதி, அனைவரையும் வரவேற்று பேசினார்..

“எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் நிறுவன நாள் பேருரையாற்றிய சிறப்பு விருந்தினர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன், “ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் (R&D) சேவைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகளுக்கான உலகளாவிய முதன்மை மையமாக இந்தியா மாறி வருவதாக தெரிவித்தார்..

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை அறநெறி மற்றும் நம்பிக்கையின் மீது கட்டமைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்; அத்துடன் தயாரிப்பு சார்ந்த வளர்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்வதற்குப் பட்டம் பெறும் பொறியாளர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். கோயம்புத்தூரின் தொழில்துறை சூழலை வலுப்படுத்துவதில் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி ஆற்றிய தொடக்கப் பங்கையும் அவர் பாராட்டினார்.

விழாவிற்குத் தலைமை உரையாற்றிய எல். “கடந்த காலத்தைப் போற்றுதல், நிகழ்காலத்தை வலுப்படுத்துதல், எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற பி.எஸ்.ஜி. நிறுவனத்தின் கொள்கையை அவர் உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,கல்லூரியில் பயின்ற ஐந்து முன்னாள் மாணவர்களுக்கு அவர்களின் தொழில் சாதனைகளுக்காக “சிறந்த முன்னாள் மாணவர் விருதுகள் 2026” வழங்கி கௌரவிக்கப்பட்டது…

இதில்,பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உயர் பதவி வகித்து வரும், சூர்ய பிரகாஷ் கொல்லூரி, சாவித்திரி சீதாராமன், கிரிஷ் ராமச்சந்திரன், பாபு கிருஷ்ணசாமி, சிவஞானம், ஆகிய ஐந்து பேருக்கு வி்ருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்…

விழாவில் சிறப்பு விருந்தினர் பவள விழா சிறப்பு மலரை வெளியிட, அதன் முதல் பிரதியை ஜி. ஆர். கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *