துறையூர் ஆக-25
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கிருஷ்ணசாமி தலைமையில் புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் (25-08-2026) விழா நேற்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ ஆணைக்கிணங்க நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் கலந்து கொண்டு அண்ணா நகரில் உள்ள கேப்டன் சிலைக்கும்,துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கும்
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனையடுத்து கீழக்குன்னுப்பட்டி,அண்ணா நகர், மேலக்குன்னுப்பட்டி, வேங்கடத்தானூர் உள்ளிட்ட கிளைகளில் கழக கொடி ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து துறையூர் குட்டக்கரையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு மதியம் வடை, பாயாசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளுக்காக பள்ளியின் நிர்வாகி மற்றும் மாணவர்கள் பிரார்த்தனை செய்து
நன்றி கூறினர்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் துரை சதீஷ்குமார், துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், துறையூர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் முருகேசன்,நகர செயலாளர் சங்கர்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவகுமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் செந்தில் , ரமேஷ், கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் மாமுண்டி, பிரபாகரன்,மலை நடராஜன், மணிகண்டன், பிரபாகரன்,நடராஜன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில், புளியம்பட்டி கிளைச் செயலாளர்கள் செந்தில், மனோகர், முருகேசன், மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள் துணை செயலாளர்கள் ரமேஷ், தாமரை, சந்தானம், பொருளாளர் செல்வராஜ், மேலகுன்னுப்பட்டி கிளைச் செயலாளர் ரமேஷ், செங்காட்டுப்பட்டி கிளைச் செயலாளர் சீனிவாசன், கிருஷ்ணன்,கிருஷ்ணமூர்த்தி, அண்ணாநகர் வினோத், பாக்யராஜ், வினோத்குமார், உதயா, ராஜா, நரசிங்கபுரம் முத்தையா, குமார்,முருகேசன் சபா ரத்தினம், ரெங்கநாதபுரம் கிளைச் செயலாளர் சுப்பையா மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்