நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் திருப்புகலூர், ஏனங்குடி, திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, புதுக்கடை, கயத்தூர் உள்ளிட்ட 6 வருவாய் கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாகை தாசில்தார் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் குமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பெரும்பாலான மனுக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாய கூடம், ஆற்றின் கரையோரங்களில் தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் லெட்சுமி, ஜெகதீசன், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம உதவியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.