தஞ்சாவூர் மாவட்டம் :நாச்சியார்கோவில்,: உலகம் போற்றும் மனிதநேயமிக்க அன்னை தெரசாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாச்சியார்கோவில் அருகே துக்காட்சியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு லயன்ஸ் சங்க தலைவர் லயன் என்.பாலமுருகன் தலைமை வகித்தார். அன்னை தெரசாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து துக்காட்சியில் பணிபுரியும் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், மண்டல பொறுப்பாளர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்