வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காரைக்கால் வழியாக பயணம் செய்வார்கள். இதை பயன்படுத்தி குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் அறிமுகமில்லாத நபர்களின் நடமாட்டம் அதிகரிக்கவும், குற்ற நோக்கத்துடன் செயல்படும் சிலர் வீடுகள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்களை நோட்டமிடவும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், சந்தேகப்படும்படியாக எதுவும் கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் காரைக்கால் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது
அவசர உதவி எண்கள் 100 / 112 – காவல் கட்டுப்பாட்டு அறை 04368 223100
__
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால் – 9385856800