திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரோட்டரி அரங்கில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற எழுத்தாளர் முனைவர். மு.முருகேஷ் எழுதிய விடியலின் இன்னொரு பெயர் கிழக்கு நூல் வெளியீட்டு விழா சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் எ.தேவா, இரா.நளினா, துணைச் செயலாளர்கள் ஜா.தமீம், பூ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க செயலாளர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, அரிமா சங்க மேனாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி கவிஞர் மு.முருகேஷ் எழுதிய விடியலின் இன்னொரு பெயர் கிழக்கு என்ற நூலினை வெளியிட்டார். மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் நூலினை பெற்றுக் கொண்டார்.
அரிமா சங்க மேனாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி சிறப்புரையில் பேசியதாவது: உலக நாடுகளில் இந்தியா என்பது தனித்தன்மை வாய்ந்தது. மேலும் பன்முக பண்பாட்டை கொண்ட இந்த தேசத்தில் எண்ணற்றவர்கள் போராடி தன் உயிரை மாய்த்து, சுதந்திரத்தை பெற்றார்கள். விடியல் என்பது இரண்டு வகைப்படும் காலையில் விடியும் விடியல் என்பது ஒன்று. ஆனால் இந்திய நாட்டின் சுதந்திரம் என்றது மாபெரும் விடியல். அனை வரும் அத்தனை நலமும் பெற வேண்டும் என்பது தான் சுதந்திர கோட்பாடு. அந்த சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்பதே கேள்வி. இந்திய மக்களுக்கு சுதந்திரம் என்பது 60 விழுக்காடு தான் இருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு கூட ஆபத்து வந்திருக்கிறது. தந்தை பெரியார் போன்றவர்களின் உழைப்பால் இட ஒதுக்கீடு கிடைத்தாலும், இதுவரை 5 சதவீதம் கூட பிற்படுத்தப்பட்டோர் அரசு வேலையில் இல்லை. இந்த நிலைக்கு என்ன காரணம். நாம் சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள்
நிறைவடைந்த நிலையில் அதை மக்களுக்கு நினைவூட்டும் தேவையும் இருக்கிறது. அதை தமிழ்ச் சங்கங்கள் செய்ய வேண்டும். இந்த சூழலில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்கம் சார்பில் 80ஆவது
சுதந்திர ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்த
எழுத்தாளர் மு.முருகேஷ் பாராட்டுக்கு உரியவர். இந்த விடியலின் இன்னொரு பெயர் கிழக்கு என்ற நூல் புகழ் பெறட்டும், பரவட்டும் என்று பேசினார். நூலைப் பெற்றுக் கொண்ட மேனாள் மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் எஸ்.குமார்
சிறப்புரையாற்றினார். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் சாகித்ய அகாடமி பாலபுரஷ்கார் விருது பெற்ற எழுத்தாளர் முனைவர். மு.முருகேஷ் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக, கலைச்சுடர்மணி பெ.பார்த்திபன்,
தமிழிசை பாடல்களை பாடினார். இந்த நிகழ்வில் மத்திய அரசின் டில்லி கலாச்சார பயிற்சி மையத்தில் பொம்மலாட்ட பயிற்சி பெற்று வந்த கோட்டைத் தமிழ்ச் சங்க துணை செயலாளர் சா.ரஷீனா, பள்ளிக் கல்வி துறை சார்பில் சிறந்த ஆசிரியருக்கான பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்ற தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் க.வாசு, திரைப்பட துறையில் தடம் பதிக்கும் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் வந்தை பிரேம் ஆகியோர் பாராட்டப்பட்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க செயலாளர்
பூங்குயில் சிவக்குமார், துணைத் தலைவர் கவிஞர் தமிழ்ராசா,
வட்டார வளர்ச்சி அலுவலர்
ஏ.பி.வெங்கடேசன், தலைமை ஆசிரியர் மழையூர் வீ.தமிழரசன் வாழ்த்துரை வழங்கினர். வந்தவாசி நகர மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன் அகஸ்தியா மெட்ரிக் பள்ளி ர.சுரேந்திரன், மாவட்ட எக்ஸ்னோரா
மலர் சாதிக், எக்ஸ்னோரா ரயில்வே சு.தனசேகரன், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க இணை செயலாளர் ஏழுமலை, துணைத் தலைவர் கோ.ஸ்ரீதர், கலைஞர் முத்தமிழ்ச் சங்க தலைவர் வந்தை குமரன், சமூக சேவகர்கள் கேப்டன் மு.பிரபாகரன்,பொன்னம்பலம், வி.விஜயகுமார், வந்தவாசி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் டி.சாந்தி, தலைமை ஆசிரியர் ஆர்.நம்பெருமாள், எஸ்.சித்ரா, வீனஸ் வித்யாலயா
ரமேஷ் கண்ணன், அன்பால் அறம் செய்வோம் நிறுவனர் அசாருதீன், ஆரியன் ஆப்டிகல்ஸ் அப்துல் ரஹ்மான், பாடகர் லாரன்ஸ், மேனாள் மாவட்ட கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி, விடுதி காப்பாளர் ஆர்.எஸ்.சிவக்குமார், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலரின் உதவியாளர் ஜெயக்கண்ணு, கோட்டை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அ.முரளி, ஸ்ரீமந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.