மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரி மாணவர் இயக்கங்களை குறி வைத்து, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இடதுசாரி அமைப்புகளின் உறுப்பினர் களை கணக்கெடுக்க உத்தர விட்ட குஜிலியம்பாறை தாசில்தார் அய்யாசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நடந்த இந்த
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தெற்கு பகுதி குழு செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். இந்திய மாண வர் சங்க மாவட்ட தலைவர் டீலன் ஜெஸ்டின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சசிகலா, மாவட்ட செயலாளர் கணே சன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *