துறையூர் ஆகஸ்ட்-26
திருச்சி மாவட்டம் துறையூர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் வரை செல்லக்கூடிய 3A வழிதடத்தில் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து மக்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில்சென்னையில் நேற்று 250 புதிய ஏசி பேருந்துகளை துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து துறையூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது சொந்த தொகுதிக்கு ஒரு புதிய பேருந்து பெற்று துறையூர் டூ சமயபுரம் 3A வழிதடத்தில் இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மண்டல மேலாளர் (தொழில்நுட்பம்) பூபத, துறையூர் போக்குவரத்து கிளை மேலாளர் ஜெயசந்திரன், கண்காணிப்பாளர் தியாகராஜன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், மாவட்ட இணை செயலாளர் பா.மதன், நகர செயலாளர்கள் வினோத்குமார்(தெ), சூர்யா(வ), ஒன்றிய செயலாளர்கள் தர்மா(கி),
ரவிச்சந்திரன்(வ),சுதாகர்(தெ),சிவப்பிரகாசம்(மே),உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள்
ஆனந்த்(தெ),குணசேகரன்(வ),சண்முகம்(ம),பேரூர் கழக செயலாளர்கள்
முத்துகிருஷ்ணன்(உப்பிலியபுரம்), கண்ணன் (எ)கிருஷ்ண மூர்த்தி(பாலகிருஷ்ணம்பட்டி) மற்றும் தமிழக வெற்றி பேரவை செந்தில்குமார், மணிகண்டன்,அன்பழகன், மகேந்திரன்,உதயகுமார், விஜயகுமார்,முத்துக்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்