கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக எதிர்வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று 15 சதவீத வன்னியர் உள் ஒதுக்கீடு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஒரு தொகுதிக்கு குறைந்தது பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்திடவும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் மாநிலத் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மருத்துவர் மணி அவர்களுக்கு கரூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன் , மாநகரச் செயலாளர் ராக்கி முருகேசன், உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.