நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, தொடர்பு துண்டிக்கப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை விரைந்து கண்டறிந்து, பத்திரமாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா இது சம்பந்தமாக மனு அளித்தனர் மனு விபரம்

தேனி மாவட்டம் கோடங்கிபட்டியைச் சேர்ந்த செல்வம், அவரது மனைவி சித்ராதேவி மற்றும் சரஸ்வதி ஆகிய 3 பேரும் கடந்த 14-ந் தேதி ஆன்மிக சுற்றுலாவுக்காக நேபாளத்தில் உள்ள கைலாஷ் யாத்திரைக்கு சென்றுள்ளனர். அவர்கள் மகாதேவ் கைலாஷ் யாத்திரைக்காக சென்ற 49 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காரணமாக பலர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கோடங்கிபட்டியைச் சேர்ந்த 3 பேரையும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், வெள்ள பாதிப்புக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதனால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர். எனவே, நேபாளத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் நிலையை உடனடியாக கண்டறிந்து, அவர்களை பத்திரமாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 3 பேரையும் விரைந்து கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *