தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன், மேஜர் ஜெஸ்லின் போஸ்கோ ஜான்சன்,மற்றும் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்பு

கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளி விளையாட்டு விழா காளப்பட்டியில் உள்ள சுகுணா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.சுகுணா குழுமத்தின் தலைவர் லஷ்மி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிர்வாக இயக்குநர் அனிஷ்குமார், இயக்குநர் சாந்தினி அனிஷ்குமார்,மற்றும் இயக்குநரும் முதல்வருமான ஆண்டனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…

விழாவில் எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.விழாவிற்கு தலைமை விருந்தினராக தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன், மேஜர் ஜெஸ்லின் போஸ்கோ ஜான்சன் (இந்திய ராணுவம்) மற்றும் கவுரவ விருந்தினராக கோவை பூளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வனவர் செந்தில்குமார்,ஆகியோர் கலந்து கொண்டனர்…

முன்னதாக விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து செயல்பட்ட மாணவ,மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதுஇதே போல சிறந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..

தொடர்ந்து மாணவர்கள் பேண்டு வாத்திய குழுவினர் பார்வையாளர்கள் வியக்க இசையமைத்து கரவொலிகளை பெற்றனர்இதே பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

மாணாக்கர்களின் ‘ஓட்டப்பந்தயம்’ மற்றும் ‘ரிலே’ ஆகியவை பார்வையாளர்களின் உற்சாக கரகோஷத்தோடு நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில்,பள்ளி தலைமையாசிரியை லீனா நிரோசின், நிர்வாக அலுவலர் உமாராணி மற்றும் சுகுணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *