தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கல்வி மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு (SMC-2026) மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வீராசாமி தலைமை தாங்கினார். இதில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC-2026) முக்கியத்துவம், கல்வியின் அவசியம், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு (SMC-2026) மறுகட்டமைப்புத் தேர்தல் குறித்தும் பெற்றோர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் அனைத்து பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர், முன்னாள் மாணவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, பள்ளியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவில் இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *