கும்பகோணம்:*குடந்தை காவேரி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் வட்டாரத் தலைவருமான லயன் டாக்டர் ராஜா ரகுபதி பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மூட்டுத் தேய்மான பரிசோதனை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செம்போடை புனித சேவியர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு லயன் டாக்டர் ராஜா ரகுபதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் சக்கரபாணி, காவேரி லயன்ஸ் சங்கத் தலைவர் சக்திவேல், செயலாளர் பாலு, பொருளாளர் குபேந்திரன் உள்ளிட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள்,அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு அவரது பிறந்தநாளை முன்னிட்டு சந்தன மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாமக்கல் எம்.எம். மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். இதில் மூட்டு வலி, முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு தேய்மானப் பிரச்சினை உள்ள நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர். அவர்களுக்கு இலவச எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ஒருவருக்கு காது கேட்கும் கருவி, ஆட்டோ ஓட்டுநருக்கு காக்கிசட்டை,வேட்டி, தூய்மைப் பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.