கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (ஆர்.பி.எஸ்.) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டு விழா ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.


விழாவிற்கு ‘ஹோஷ் அஜைல்’ மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்ட்டின் தேவபிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.


நிகழ்ச்சியில் ரத்தினம் குழுமத்தின் இயக்குநர் ஷிமா செந்தில், பள்ளி முதல்வர் திருமதி ஆஷ்மி, தலைமை செயல்பாட்டு அலுவலர் அபிநயா சங்கரி மற்றும் வணிக வளர்ச்சி மேலாளர் கார்த்தி பழனிவேலு ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.


காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இவ்விழாவில், நர்சரி முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவியர் சிலம்பம், டேக்வாண்டோ, ஏரோபிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூம்பா உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி சாகசங்களையும், தடகளப் போட்டிகளையும் திறம்பட நிகழ்த்திக் காட்டினர்.


போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவியருக்குத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் இல்லங்களுக்கு (ஹவுஸ்) இடையே நடைபெற்ற போட்டிகளில் ஜத்தன் ஹவுஸ் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *