கோவை ஆனைக்கட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாங்கரை,பகுதியில் ‘யோகி ராம்சுரத்குமார் அருளாலயம் டிரஸ்ட்’ சார்பாக புதிதாக அமைக்கப்படவுள்ள அருளாலயத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

காலை 6:00 மணி முதல் சிறப்பு பூமி பூஜை, திருமுறைப் பாராயணம் மற்றும் ஆன்மீக வழிபாட்டு நிகழ்வுகள் வேத மந்திரங்கள் முழங்கத் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்ற இதில், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பகவானின் நிரந்தர அடிமையான அன்னை மா தேவகி அம்மா விழாவில் நேரில் பங்கேற்று, அருளாலயப் பணிகளுக்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

அப்போது பேசிய அவர்,கோவையில் முதன் முறையாக அமைய உள்ள இந்த அருளாலயத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அருள் ஆசிகளை பெற வாய்ப்பு அமைந்துள்ளதாக தெரிவித்தார்..

விழாவிற்கான ஏற்பாடுகளை யோகி ராம்சுரத்குமார் அருளாலயம் டிரஸ்ட் நிர்வாகிகள் ராமச்சந்திரன்,பிரேம் குமார்,நாகராஜன், வெண்தாமரை பாலு,மற்றும் ராஜன்,கருணாபிரபு ஆகியோர் செய்திருந்தனர்..

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்,மற்றும் ராம்ஜி ஆஸ்ரம் துரைசாமி,ஈரோடு வேதாஸ்ரமம் பத்மநாபன்,மதுரை குருஷேத்ரம் மாசாண முத்து,வி.கே.சுந்தர்ராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

விழாவில் கோவை,ஈரோடு,திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு பபுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, பகவான் யோகி ராம்சுரத்குமார் மற்றும் அன்னை மா தேவகி அம்மாவின் அருள் பெற்றுச் சென்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து, விழாவுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பெருந்திரளான அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *