(Zero Hunger) எனும் பசிப்பிணி போக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர் ஜெனித் சார்பாக இரண்டாவது சீசனாக நடைபெற்ற இதில்,24 அணிகள் பங்கேற்பு
இளம் தொழில் முனைவோர்களின் தலைமைத்துவம், சமூக சேவை, வணிக மேம்பாடு, சர்வதேச இணைப்புகள் ஆகியவற்றின் மூலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கட்டமைப்பாக ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் எனும் ஜே.சி.ஐ.(JCI) செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர் ஜெனித் அமைப்பு சார்பாக ஜெனித் பிரீமியர் லீக் 2.0 (ZPL 2.0).கிரிக்கெட் போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள டென் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது ஜீரோ ஹங்கர் எனும் பசிப்பிணி போக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் இரண்டாவது சீசனாக நடைபெற்ற இதில் 24 அணிகள் பங்கு பெற்றன…
முன்னதாக போட்டிகளை JCI India முன்னாள் தேசியத் தலைவர் JCI PPP பால வேலாயுதம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார் இதில் கவுரவ அழைப்பாளராக ஜே.சி.ஐ.மண்டல தலைவர் JCI PPP பிரேம் சரண் மதிவாணன், மற்றும் ஜனாசா குழுமங்களின் இயக்குனர் RTN நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டி தொடரில் பிளிட்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இரண்டாம் இடத்தை கார்ப்பரேட் மான்ஸ்ட்ரஸ் அணியும்,பெர்ஃபெக்ட் 7 அணி .மூன்றாம் இடத்தையும் பிடித்தன தொடர்ந்து தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஜே.சி.ஐ.கோயமுத்தூர் ஜெனித் பிரசிடென்ட் சிந்து தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நீலானி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீர்ர்களுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்..
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ.கோயமுத்தூர்ஜெனித் நிர்வாகிகள் அரவிந்த், ,மணிகண்டன்,ஆனந்தி,அஜெக்ஸ் ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர் …