காஞ்சி மாவட்டம்: 104 மாம்பாக்கம் அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திண்டிவனம் புனித சூசையப்பர் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர் அருட்தந்தை சார்லஸ் அடிகளார் MMI சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை பிரபுதாஸ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருவானைக்கோயில் கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்தர், பன்னீர்செல்வம் சித்தனக்காவூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் கா. நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினருக்கு மாணவர்களால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து மாணவர்களின் சார்பில் சுதந்திர தினப் பேச்சு, சுதந்திர தின நடனம் மற்றும் சுதந்திர தின சைகை நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, உத்திரமேரூர் வட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர், பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
நிகழ்வின் நிறைவாக மாணவர்களுக்கு லட்டு இனிப்பு வழங்கப்பட்டது. விழா சிறப்பாகவும் இனிதாகவும் நிறைவு பெற்றது.