தேனி மாவட்டம் உத்தமபாளையம்–கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் புதுப்பட்டி அருகே தொடர்ந்து நடைபெறும் சாலை விபத்துகளைத் தடுக்க உத்தமபாளையத்தில் இருந்து புதிய புறவழிச்சாலை பைபாஸ் அமைக்க வேண்டும் என்று சட்ட பேரவையில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார்.
சட்டப் பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை தொடர்பான துணைக் கேள்வி நேரத்தில் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசினார்
அப்போது அவர் பேசியதாவது
தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டியில் இருந்து குமுளி வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது 2 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தமபாளையம்–கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி அருகே அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு விலை மதிக்க முடியாத மனித உயிர் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. தொடர் விபத்துகளால் அந்தப் பகுதி மக்கள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே சாலை விபத்துகளைத் தடுக்க உத்தமபாளையத்தில் இருந்து புதிய புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், விபத்துகளையும் கட்டுப்படுத்த முடியும்.இதுகுறித்து நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக தேவையான பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.