ஊதியூர் அருகே சாலை விபத்தில் தனியார் கம்பெனி சூப்பர்வைசர் உயிரிழப்பு.
திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அடுத்த எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்அருண் பிரசாத்(28), தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இவர் மோட்டார் பைக்கில் வஞ்சிப்பாளையம் அருகே வந்த கொண்டிருந்தபோது
கட்டுபாட்டை இழந்த பைக் சாலையில் சறுக்கி விழுந்தது. இதில் அருண்குமாருக்கு பலத்த இரத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அருணை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் செல்லும் வழியிலே மயங்கியதால் மீண்டும் காங்கயம் அரசு மருத்துவமனை வரும் வழியிலே உயிரிழந்துள்ளார். இது குறித்து ஊதியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.