அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெறும் கந்தன் என்கின்ற சிவஞானம் அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி பாராட்டு விழா அரியலூர் நகராட்சி கூட்ட மன்றத்தில் நடைபெற்றது விழாவிற்கு நகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார்

சுகாதார ஆய்வாளர் தர்மராஜா முன்னிலை வகித்தார் சுகாதார அலுவலர் ஆண்டனிஸ்டீபன் மேலாளர் அழகுமுருகன் ஆகியோர் பணி ஓய்வு பெறும் கந்தன்சிவஞானத்திற்கு சால்வை அணிவித்து சந்தன மாலைகள் அணிவித்து பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி நகராட்சியில் அவர் ஆற்றிய சேவைகள் பற்றி விளக்கி பேசினார்கள்

நகராட்சி கவுன்சிலர்கள் சத்தியா பரமேஸ்வரன் புகழேந்தி தொமுச நிர்வாகிகள் கலைஞர் களப்பணியாளர் ராகவன் சீனிவாசன் மகாராஜன் சுகுமாரன் காத்தவராயன் திருநாவுக்கரசு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டியன் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *