புதுச்சேரி-: காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட புதுத்துறை மற்றும் தருமபுரம் வாய்க்கால்கள் மற்றும் அவற்றை உள்ளடக்கிய கிளை வாய்க்கால்களை தூர்வாரும் பணி தொடங்கியது.
மொத்தம் 14.05 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் இப்பணியை, காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஏ.எம்.எச். நாஜீம் தொடங்கி வைத்தார்.
வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதன் மூலம் நீர்வரத்து சீராகி, விவசாய நிலங்களுக்கு தேவையான பாசன நீர் தடையின்றி கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், நீர்ப்பாசனம் மற்றும் பொதுச்சுகாதாரக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் அருளரசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்