தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

சாலையில் கிடந்த பொன் தாலிக்கயிறு குண்டடம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே மேட்டுக்கடை பகுதியில் சாலையில் கிடந்த பொன் தாலிக்கயிறை குண்டடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

நந்தவனம் பாளையத்தைச் சேர்ந்த பூபதி என்பவர், கடந்த திங்கட்கிழமை மாலை மேட்டுக்கடை அருகே சாலையில் கிடந்த பொன் தாலிக்கயிறை கண்டெடுத்தார். அதனை குண்டடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தற்போது அந்த பொன் தாலிக்கயிறு குண்டடம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தவறவிட்டவர்கள் உரிய அடையாளம் மற்றும் விவரங்களைத் தெரிவித்து காவல் நிலையத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என குண்டடம் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *