நாகப்பட்டிணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா சமூகவலைதளத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்
சைபர் குற்றவாளிகள் RTO Challan மெசேஜ் அனுப்பி, உங்களுடைய RTO Challange Payment Pending இருக்கு என்று SMS அல்லது வாட்ஸ் அப் மூலம் அனுப்புகிறார்கள். அந்த மெசேஜ் உடன் ஒரு APK File Download செய்யும் ஒரு Option-ம் இருக்கும். அதை Download செய்தீர்கள் என்றால் உங்களது மொபைல் ஹேக் ஆகும். உங்கள் மொபைலில் Spyware நுழைந்து உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும் சைபர் குற்றவாளிகள் பார்க்கவும், திருடவும் முடியும். எனவே APK File-ஐ நீங்கள் க்ளிக் செய்யக் கூடாது. ஏதாவது சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று சரிபார்க்கவும். யார் உங்களுக்கு இந்த மாதிரி மெசேஜ் அனுப்பியது என்று அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
__
S.செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்