கரூர் செய்தியாளர் மரியான் பாபு



கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவணை கிராமம் ஒடுகம்பட்டியில் குடியிருப்புகள் குளங்கள் அருகில் அமைக்கப்பட்டும் மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் (FSTP) திட்டத்தை இரத்து செய்ய வேண்டும். சட்டவிரோதமாக காற்றாலை நிறுவனம் முறையான அனுமதியின்றி மின் வழித்தடம் அமைத்ததை தட்டி கேட்ட விவசாயி மீது கனரக வாகனம் ஏற்றி கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது SC/ST பிரிவின் கீழ் பொய் புகாரின் மீது போடப்பட்ட வழக்கை இரத்து செய்ய வேண்டும்.ஊழல் அதிகாரிகள் கடவூர் வட்டாட்சியர் பானுமதி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், மங்கையர்க்கரசி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும்.முறையான அனுமதி இன்றி அமைக்கப்பட்டும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களின் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மேலும், சமூக செயற்பாட்டாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் காற்றாலை நிறுவன அடியாட்களால் அச்சுறுத்தல் மற்றும் கொலைமிரட்டல் விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இவ்வார்ப்பாட்டத்தில் என்.வி.நாகராஜன் தலைவர் தமிழ்நாடு ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பு,
வரவணை சுரேஷ் இளைஞரணித் தலைவர்,ராமமூர்த்தி கவுன்சிலர்,வழக்கறிஞர் தியாகராஜன், பொருளாளர் R.Pபழனிச்சாமி,பாஸ்கர் ex கவுன்சிலர்,பாமகபழனிச்சாமி,நவக்குளம் ஜோதிவேல்,
நவக்குளம் கண்ணன்,சிங்கத்தமிழர் கிருஷ்ணசாமி,ராஜசேகர் இளைஞர் காங்கிரஸ்
ஆசைத்தம்பி, கனகராஜ், கோவிந்தசாமி,ஒடுகம்பட்டி அழகர் பெருமாள், முனியப்பன்,ரவி, மற்றும் பொதுமக்கள் கலந்து பலர் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *