துறையூர் செப்-03
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எரகுடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் கணேசன் தலைமையில் 01-09-2026 அன்று காலை10 மணி அளவில்100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சித்ரா, இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் 03/08/2026 லிருந்து ஒரு நாளைக்கு 600 பேருக்கு வேலை தருவதாகவும், அடுத்த வாரத்தில் (10/08/2026) இருந்து ஆயிரம் நபர்களுக்கு வேலை தருவதாகவும் அதிகாரிகள் கூறியதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதில் விதொச ஒன்றிய செயலாளர் மங்கள்ராஜ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், கணேசன், கர்ணா,கிளை தோழர்கள் முத்துக்குமார் பாலசுப்பிரமணியன் செல்வகுமார் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்