ஃபிக்கி புளோ கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்
தொழில்–கல்வித்துறை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பிக்கி புளோ அமைப்பு மற்றும் –பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்
கோவையில் ஃபிக்கி புளோ கோயம்புத்தூர் மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிக்கி புளோ கோயம்புத்தூர் தலைவர் பர்னிகா குப்தா, பிஎஸ்ஜி மேலாண்மை நிறுவன இயக்குநர் டாக்டர் வி. ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து ஃபிக்கி கோவை கிளை தலைவர் பர்னிகா குப்தா மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை நிறுவன இயக்குநர் டாக்டர் வி. ஸ்ரீவித்யா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்..
புதிய ஒப்பந்தம் வாயிலாக மாணவர்களுக்கு தொழில் துறை கலந்துரையாடல்கள், வழிகாட்டுதல், தொழில்முனைவோர் பயிற்சிகள், பயிலரங்குகள், அறிவுப் பகிர்வு மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..
குறிப்பாக கல்விக்கும் தொழில் துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, மாணவர்களை எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு தயார்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர் இந்த முன்னெடுப்பை பிக்கி புளோ கோயம்புத்தூரின் மேம்பட்ட உற்பத்தித் துறைத் தலைவர் திவ்யா கார்த்திக் ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் உமா மகேஸ்வரி, மீனா சுவாமிநாதன் உள்ளிட்ட பிக்கி புளோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்…