காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவர் உயிரிழப்பு.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம், காங்கேயம்–கோவை சாலையில் சம்மந்தம்பாளையம் பாலமுருகன் கோவில் சென்ற பொழுது இருசக்கர வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
காங்கேயம் அருகே உள்ள சம்மந்தம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் பெரியசாமி (61) என்பவர், தனது TN 42 P 3528 என்ற பதிவு எண்ணுடைய TVS XL இருசக்கர வாகனத்தில், காங்கேயம் சரவணா மெடிக்கல் சென்டரில் டயாலிசிஸ் சிகிச்சை முடித்துவிட்டு, இன்று காலை சுமார் 10.15 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சம்மந்தம்பாளையம் பாலமுருகன் கோவில் அருகே, கோவிலில் இருந்து வெளியே வந்ததாகக் கூறப்படும் கடையூரைச் சேர்ந்த கருப்பன் மகன் ரகுபதி (54) என்பவர் ஓட்டி வந்த TN 39 U 3569 என்ற பதிவு எண்ணுடைய TVS 50 இருசக்கர வாகனம், பெரியசாமி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவர் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ரகுபதி, காங்கேயத்தில் உள்ள ஜே.கே. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.