செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிதனஞ்செழியன் அவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களிடம் தலைமை ஆசிரியர் சீனிதனஞ்செழியன் அவர்கள் விருதுக்கான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றார்.

கல்விப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தலைமை ஆசிரியர் சீனிதனஞ்செழியன், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமின்றி, அவர்களின் ஒழுக்கம் மற்றும் தனித்திறன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

அவரது கல்விச் சேவையைப் பாராட்டும் வகையில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது கல்விப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *