ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக 10 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மாவட்ட வனத்துறை மற்றும் தமிழ்நாடு பணி பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் இவர்களோடு இணைந்து மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 2026 மற்றும் 27 ஆம் ஆண்டு 10 லட்சம் பணம் வர விதைகள் விதைக்கும் பணி மற்றும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன் புரம் அருகே உள்ள குரங்கன் தட்டு கிராமத்தில் சமுதாய நலக் கூடத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவரும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார் அதன் பிறகு அமைச்சர் ஸ்ரீநாத் சிம வாடி குளத்தங்கரை ஓரத்தில் பனை விதை விதைக்கும் பனினய துவக்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் ஸ்ரீநாத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பானுமதி தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்
மேலும் அமைச்சர் ஸ்ரீநாத் துக்கு பனை ஓலை மாலை அணிவித்து ராஜ கிரீடம் வைத்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில் தமிழ்நாட்டில் அழிந்து வரும் கற்பகதரு. கற்பக விருடசம் என்ற பெருமைக்குரிய போற்றக்கூடிய தமிழர்களின் தேசிய மரமான பனை மரத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாம் செயல்பட வேண்டும்
ஒரு கோடி பனை மர விதைகள் விதைக்கும் பணியை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இயற்கை அறங்களை பாதுகாக்க புயல் மற்றும் சூறாவளி பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க கடற்கரை ஓரங்களிலும் தீவுப் பகுதிகளிலும் நீர் நிலையை பாதுகாக்க கறைகளை வலுப்படுத்த மண்ணரிப்பை தடுக்க ஆற்றங்கரை ஓரங்களிலும் குளத்தங்கரை ஓரங்களிலும் வாய்க்கால் கரையோரங்களிலும் நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும் சாலைகளை பாதுகாக்க சாலை ஓரங்களிலும் சமூக நலனில் அக்கறையோடு பொதுமக்கள் சமூக மனப்பான்மையோடு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பொதுமக்கள் பண விதைகளை நட வேண்டும் அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சர் ஸ்ரீநாத் பேசினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்டோ. தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் பிரைட்டர். உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.