.இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் வ உ.சிதம்பரனார் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது முழு உருவ திரு உருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர் சுரேஷ் குமார். ராமர். பிரபாகர். ராஜாமணி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.