எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
ஆசிரியர் தின விழா
வைத்தீஸ்வரன் கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பள்ளி நிர்வாக குழு செயலர் திரு. V பாஸ்கரன் அவர்கள் தலைமையேற்றார்.
சிறப்பு விருந்தினராக A.V.C. பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் திரு.S.ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர் தின சிறப்புரையாற்றி, 2025-2026 கல்வியாண்டில் 10, மற்றும் 12ம் வகுப்பில் 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் அலுவலக உதவியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மங்கைமடம் மாருதி பில்டர்ஸ் திரு.அகோரம்அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் பள்ளி முதல்வர் திரு.ஜெகதீஷ்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் சீர்காழியில் நடந்த விழாவில் நம் பள்ளி முதல்வர் திரு.A.ஜெகதீஷ்குமார் அவர்களுக்கு
நற்றுணை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது குறித்து பள்ளி செயலர், ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும். பாராட்டினர்
மாணவர் தலைவர் திவ்யா வரவேற்புரையாற்றினார், மாணவி வேதிகா நன்றியுரையாற்றினார்.
ஆசிரியர் தின விழாவில்மாணவிகள் சுப்ரிதா மற்றும் பிரீத்தி அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினர்.