நாச்சியார்கோவில்:ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு ‘சேவைச் செம்மல்’ விருது வழங்கும் விழா சிறப்பான நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் பாலமுருகன்,பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு சோ.செந்தில்குமார் , கு.சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரியை மா.சீத்தாலெட்சுமி ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கி ‘சேவைச் செம்மல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க தோழமைகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்