கோவை கணபதி மாநகர் பகுதியில் உள்ள ‘முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் & ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மற்றும் ‘யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் டிரஸ்ட்’ இணைந்து 15-வது பெல்ட் கிரேடிங் தேர்வு (15th Belt Grading Examination) விளாங்குறிச்சியில் உள்ள ‘ஆர்ச்சிட்ஸ் தி இன்டர்நேஷனல் ஸ்கூல்’ வளாகத்தில் நடைபெற்றது….

‘முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் & ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தேர்வில், அகாடமியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் தங்களின் தற்காப்புக் கலைத் திறன்கள், உடற்பயிற்சி நெறிமுறைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களை நடுவர்கள் முன்னிலையில் திறம்பட வெளிப்படுத்தினர்.

அவர்களின் திறமைகளை விரிவாக ஆய்வு செய்த நடுவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்தடுத்த நிலைகளுக்கான வண்ண பெல்ட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.

இந்நிகழ்வில் அகாடமியின் பயிற்சியாளர்கள் பாலாஜி,மணிகண்டன்,தர்னீஷ் மற்றும் மௌனிகா ஆர்ச்சிட்ஸ் சர்வதேசப் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *