.


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் பாலன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் குருஸ் பர்னாந்து சிலை முன்பு போக்குவரத்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் ஹெல்மெட் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் அதனால் ஏற்படும் விபத்து பற்றியும் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது என்ற விழிப்புணர்வும் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினார்கள் அதுபோல செல்போன் பேசிக்கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து பற்றி பொது மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டது. அதே வேளையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டி வந்த பொதுமக்களை போக்குவரத்து காவல்துறையினர் பாராட்டினார்கள். பொது மக்களாகிய உங்களின் உயிர் முக்கியம் உங்களை நம்பி உங்களது குடும்பம் உள்ளது

ஆகையால் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்து வாகன ஓட்ட வேண்டும் மது அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் இருசக்கர வாகன ஓட்ட வேண்டாம் அதுபோல செல்போன் பேசிக்கொண்டு இருசக்கர வாகன ஓட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது ஆகையால் பொதுமக்கள் இதனை எல்லாம் தவிர்க்க வேண்டும் உங்களை நம்பி உங்களது குடும்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனன முருகன் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர் ஏற்படுத்தினார்

போக்குவரத்து காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர் ஏற்படும் வகையில் கரடி பொம்மை நிறுத்தி வைக்கப்பட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வரும் பொதுமக்களுக்கு மேலும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *