தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் அந்தந்த பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் கண்காணித்து வருகிறார். தற்போது கோடை காலத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருப்பதால் தாமிரபரணி ஆற்றில் ஆற்று நீர் இல்லாமல் உள்ளது
பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு அதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கப்பட்டு பம்பிங் மூலம் மாநகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது
எந்த விதமான தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மேயர்ஜெகன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் ஆதிபராசக்தி நகரில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மேயர் ஜெகன் ஆய்வு செய்தார். அந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து எந்தெந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது
எந்தெந்த நேரத்தில் எவ்வளவு எத்தனை மணி நேரம் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்ற விபரங்களை மேயர் ஜெகன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு எந்த விதமான தடை இன்று குடிநீர் சீராக வழங்க வேண்டும் என அங்கு இருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் ஜெகன் உத்தரவிட்டார்.